முதலமைச்சர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் தான் மன்னிப்பு கேட்கிறேன்! ஆ.ராசாவின் திமிரான பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியை இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர்.
இதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக தரப்பில் குஷ்பு போட்டியிடுகிறார்.அதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளரை ஆதரித்து ஆ.ராசா ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரை ஆற்றினார்.அப்போது எல்லைத் தாண்டி முதலமைச்சர் சரியான பிறப்பல்ல என கொச்சையாக பேசியது அதிமுக விடம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா மீது தாகத வர்தைகளில் பேசியதாக வழக்கு தொடுக்க வேண்டுமென்று மனு அளித்தனர்.அந்த அடிப்படையில் 3 வழக்குகளின் கீழ் ஆ.ராசாவின் மீது போலீசாரால் வழக்கு தொடுக்க்கபட்டது.அதுமட்டுமின்றி இவர் இவ்வாறு இழிவாக பேசியாதல் பொதுமக்கள் மட்டும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அதன்பின் முதலமைச்சர் நேற்று பரப்புரை ஆற்றும் போது ஆ.ராசா பேசியதை பொதுமக்கள் மத்தியில் கூறி கண்ணீர்விட்டார்.முதலைமச்சராகிய தன்னையவே இவ்வளவு பேசும் போது அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று கேட்டார்.அதனையடுத்து இன்று ஆ.ராசா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியது,முதலமைச்சர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.எனது பேச்சானது தனி மனிதனை சுட்டிகாட்டுவது அல்ல என்றார்.பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு என்று கூறினார்.நான் முதலைமச்சர் பெயருக்கு கலங்க படுத்த அவ்வாறு பேசவில்ல என்றார்.
நான் பேசியதை அனைவரும் தவறாக புறிந்துக் கொண்டனர்.என் 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால் நான் தவறாக பேசவில்லை என தீர்பளிப்பர் என்று கூறினார்.