Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒருதலை காதலால் கத்தி குத்து வாங்கினேன்!!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த குட்நைட் பட நடிகை!!!

#image_title

ஒருதலை காதலால் கத்தி குத்து வாங்கினேன்!!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த குட்நைட் பட நடிகை!!!

ஒருதலை காதல் காரணமாக கத்தி குத்து வாங்கியுள்ளேன் என்று குட்நைட், கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மருத்துவராக பணிபுரிந்து வந்த ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நீதிபதி கதாப்பாத்திரத்தில் நடித்து மருத்துவராக இருந்த ரய்ச்சல் அவர்கள் நடிகையாக பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகர் மணிகண்டன் நடித்து வெளியான குட்நைட் திரைப்படத்தில் நடிகை ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரய்ச்சல் அவர்களின் நடிப்பும் குட்நைட் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. இதையடுத்து நடிகை ரய்ச்சல் அவர்கள் சமீபத்தில் நடிகர் யோகி பாபு அவர்கள் நடிப்பில் வெளியான லக்கி மேன் திரைப்படத்தில் யோகி பாபு அவர்களுக்கு ஜோடியாக நடிகை ரய்ச்சல் அவர்கள் நடித்திருந்தார்.

மேலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் 2017ல் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் ஒருதலை காதல் காரணமாக நான் கத்தி குத்து வாங்கினேன் என்று நடிகை ரய்ச்சல் ரெபெக்கா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் “நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னை ஒருவன் ஒருதலையாக காதலித்தான். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன். இதனால் நான் வீட்டில் இருக்கும் பொழுது அந்த நபர் வந்து என்னை துருபிடித்த கத்தியை வைத்து என்னை குத்தினான். 16 முறை என்னை கொடூரமாக குத்தி தாக்கினான். ரத்த வெள்ளத்தில் நான் இருந்தேன். வீட்டின் அருகே இருந்தவர்கள் என்னை மருத்துமனையில் சேர்த்து இரத்தம் கொடுத்து என்னை காப்பாற்றினார்கள்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version