நானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்

0
131

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என நீதிமன்ற வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.ஏ.பாப்டே தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது. அதிலாபாத் முககவசம் அணியாமலும், தலைக்கவசம் அணியாமலும் இருந்தது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பிரசாத் பூஷன் கேள்வி எழுப்பினார்.

பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில் அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வழக்கறிஞர் பிரசாத் பூஷன் நீதிமன்றத்தை அவமதித்ததன் அடிப்படையில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

மேலும் குற்றவாளி என கூறப்படும் வழக்கறிஞர் பிரசாத் புருஷனுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என இன்று வெளியாகும் தீர்ப்பில் கூறப்படுவதாக வெளியானது.

இந்த நிலையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியதாவது, “கடந்த ஆறு வருடங்களாக உச்ச நீதிமன்றம் என்ன செய்து வருகிறது என்பதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் முக்கிய அம்சமாக இருப்பது எழுத்து சுதந்திரம் தான். ஆனால் இங்கு அதுவே மறுக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்.

இந்த குற்றத்திற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன். மேலும் நான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருக்கும் போது எதற்காக இவ்வளவு அவசரமாக தண்டனை வழங்க முற்படுகிறார்கள்?” எனவும் கேள்வி எழுப்பி அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.