Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் உயிர் தோழியை இழந்த சோகத்தை என்னால் ஈடு கட்ட முடியாது!! என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்!!

I can't compensate for the tragedy of losing my life partner !! Let no one celebrate my birthday !!

I can't compensate for the tragedy of losing my life partner !! Let no one celebrate my birthday !!

என் உயிர் தோழியை இழந்த சோகத்தை என்னால் ஈடு கட்ட முடியாது!! என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது நிறைய பிரபலங்கள் பல படங்களில் கமிட்டாகி தற்பொழுது பிசியாக உள்ளனர் இதைத்தொடர்ந்து. பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்ட யாஷிகாவும் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அதில் அவர் நடித்து பிரபலமான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்பட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு தற்பொழுதும் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் போன்ற சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் இவரின் நண்பர்களுடன் இணைந்து காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தினால் இவரின் உயிர் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மேலும் காரை ஓட்டி சென்றது யாஷிகா தான் அவருக்கு கை, கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த செய்தி இணையதளத்தில் வெளியாகி பல கடுமையான சொற்களை பலர் இவரை திட்டி வந்தனர். இதை தொடர்ந்து யாஷிகாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதை தொடர்ந்து அவரின் உயிர் தோழி இறந்தது குறித்து அவரிடம் யாரும் கூறவில்லை. இந்நிலையில் நேற்று ஐசியூவில் இருந்து நார்மல் அறைக்கு மாற்றப்பட்டார் யாஷிகாவுக்கு அவரின் உயிர்த் தோழி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தகவலை அவரிடம் கூறி இருந்தனர். இதை தொடர்ந்து மிகவும் மன வேதனை அடைந்த யாஷிக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் ஒரு செயலை செய்து விட்டேன். மேலும் இப்படி நடந்திருக்கும் என்று எனக்கு தெரியாது எதற்காக என்னை மன்னித்துவிடு பவானி என்று தனது இறந்து போன உயிர் தோழியிடம் மன்னிப்பு கேட்டு ஒரு செய்தியினை வெளியிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை இனிமேல் கொண்டாடப் போவதில்லை என்றும் எனக்கு யாரும் வாழ்த்துக்கள் கூற வேண்டாம் என்றும் எனது பிறந்தநாளை எனது ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் அதற்கு பதிலாக இறந்து போன எனது உயிர் தோழியின் குடும்பத்தினருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதையும் மீறி அவரின் ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் யாஷிக விரைவில் குணமாக வேண்டும் என்றும் அவருக்காக  கடவுளிடம் பிராத்தனை செய்து வருகின்றனர்.

Exit mobile version