என்னால முடியல என்னை விட்டுவிடுங்கள்.. வாலிபரை கடத்தி விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த 4 இளம் பெண்கள்!
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற ஒரு நகர் உள்ளது. அந்த நகரில் ஓர் தனியார் நிறுவனத்தில் ஒரு வாலிபர் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் அவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்பொழுது அந்த வழியே ஓர் விலை உயர்ந்த கார் வந்துள்ளது.அந்த கார் இந்த வாலிபரை பார்த்ததும் அப்படியே ஓரம் கட்டியுள்ளது. அந்த காரில் நான்கு இளம் பெண்கள் இருந்துள்ளனர்.
அதனைய டுத்து இந்த இளைஞரிடம் பெண்கள் விலாசம் கேட்டுள்ளனர். இவர் விலாசம் கூறிக் கொண்டிருக்கும் போதே உடனிருந்த பெண்கள் மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்துள்ளனர். ஸ்பிரே அடித்ததும் வாலிபர் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்து அந்த வாலிபரை பெண்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த வாலிபரின் கைகால்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக அந்த வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில் கை கால்களை அவிழ்த்துவிட்டு ஏதோ ஒரு இடத்தில் அவரை தூக்கி போட்டு விட்டு சென்று விட்டனர். பாதிப்படைந்த வாலிபர் காவல் துறையில் தனக்கு நடந்தது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த நான்கு பெண்களும் நன்றாக மது அருந்தி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னையும் மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். ஓர் ஆணையே பெண்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.