முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது – டிரம்ப்

0
124

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த அக்கொடிய வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை. இதனால் கொரோனாவின் கொடூரமான தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்கா. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிந்து வருகின்றன. இதனால் கொரோனா பரவல் முடிந்த வரை கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் அமெரிக்காவில் இதுவரை முக கவசம் அணிவதற்கு கட்டாயமாக்கப்படவில்லை.

இது சம்மந்தமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது போது முககவசம் கட்டயமாக்ககபடுவது கவர்னர்களின் உத்தரவு ஆகும் அந்த சுதந்திரத்தில் நான் தலையிட விரும்பவில்லை என்று  தொடர்ந்து கூறி வந்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து டிரம்ப் கூறினார். முக கவசம் அணிவது அசிங்கம் இல்லை அது உயிரை பாதிக்காக்கும் கவசம் எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டம் முக கவசம் அணியுங்கள் என்று கூறினார்.  ஆனால் முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.