காக்கி சட்டை தான் போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!
அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்யும் போலீசார்கள் டிக்கெட் எடுக்கவேண்டும்.மேலும் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்போலீசார்கள் சட்டப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மணலியிலிருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்பேருந்தில் சாதாரண உடையில் காவலர் ஒருவர் ஏறினார். அவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு கட்டயாமாக எடுக்க வேண்டும் என்று கூறினார். நான் யார் தெரியுமா? என்ன போய் டிக்கெட் எடுக்க சொல்ற! நான் ஒரு அரசு போலீஸ் நீ சொன்னபடி டிக்கட் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியமில்லை .
பிறகு இருவருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.டிஜிபி தான் நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை! வாரண்ட் இல்லாமல் செல்லும் காவலர்களை டிக்கெட் எடுக்கச் சொல்லி இருக்கிறார்.
மேலும் நீங்கள் சீருடையில் இல்லை எனவே டிக்கெட் எடுக்கும்படியும் பேருந்து ஓட்டுநர் காவலரிடம் கூறியதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.