கல்லூரி நாட்களில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது! நடிகர் பெருமிதம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி பலரது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை தந்திருக்கும். மேலும் இந்த கல்லூரி பார்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். அதனுள் பல நீண்ட மற்றும் பழைய மரங்கள் நிறைய இருக்கும். இயற்கையை ரசிப்பவர்கள் இந்த கல்லூரியை மிகவும் ரசிப்பார்கள்.
லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையத்தின் வழியாக நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இங்கு படித்த பல்வேறு முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஆன்மிகப் பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர்களும் ஆக இருக்கும் மஹாத்ரியா ரா., மற்றும் முன்னாள் மாணவர் மற்றும் ஓ.பி.ஜிந்தால், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் லயோலா கல்லூரி சார்பில் முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்படி ஐஏஎஸ் அதிகாரிடி. பால நாகேந்திரனுக்கு(2007 – 2010) வழிகாட்டும் ஒளி விருதும்,சி.சுப்பாரெட்டிக்கு (1974-77) வணிகத்தலைவர் விருதும், அஸ்வந்த் தாமோதரனுக்கு (1974-77) உலகளாவிய ‘‘லோயோலைட்’’ விருதும், எம்.ராசாக்கு (1964-67) குடிமகன் விருதும், எஸ்.முரளிதரனுக்கு (1979-82) கொரோனா தடுப்பு வீரர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
அதன்பின் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் நடிகருமான சூர்யா பேசினார். அப்போது அவர் இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் இந்த கல்லூரியில் படித்த நினைவுகள் கண்முன்னே வந்து செல்கின்றது. கல்லூரி காலத்தில் எல்லாம் எனக்கு எதுவும் பாட தெரியாது. பாடலுக்கு நன்றாக விசில் மட்டுமே அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். அதனால் பிகில் என்று கூட கல்லூரியில் புனைப்பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள் என்று கூறினார்.
மேலும் தற்போதுள்ள நோய்த்தொற்று காலத்தில் அனைவரும் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் கூறினார். மேலும் நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரும் விஐடி நிறுவன தலைவருமான விஸ்வநாதன், முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குனர் மற்றும் முதல்வருமான தாமஸ் அடிகளார், லயோலா கல்லூரியின் அதிபர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார், கல்லூரி செயலாளர் செல்வநாயகம் அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.