Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாற்றுத்திறனாளிகளின் துறையை என்னுடைய தனி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் விதத்தில் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்க கூடாது,ஒரு குறிப்பிட்ட பகுதி வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. எல்லோருக்குமான வளர்ச்சியாக இருந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது.

அரசின் பயன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் இருக்க மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அதன்படி தான் திட்டமிடுகிறோம், செயல்படுத்துகிறோம்.

அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுபவரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகள். அவர்களுடைய உரிமையை காக்கவும், சமுதாயத்தில் சமநிலையில் வாழ்வதை உறுதி செய்திடவும் கடந்த 2011 ஆம் ஆண்டில் கலைஞரால் இது தனி துறையாக ஏற்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்தார். அதன் அது மாற்றுத் திறனாளிகள் துறையை நான் என்னுடைய தனி கவனிப்பில் வைத்திருக்கிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவி தொகையாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் 2000 ரூபாயாக வழங்கப்படுகிறது. இதனால் 2,11,391 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

மனவளர்ச்சிக்குன்றிய மாற்று புற உலகச் சிந்தனை தோன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் தொழில் தொடங்க உதவி செய்ய குறைந்தபட்ச கல்வி தகுதியினை8ம் வகுப்பு தேர்ச்சியாக குறைத்தும், வயது உச்சவரம்பை 45 லிருந்து 55 ஆக அதிகரித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணம் இன்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் எல்லோருக்கும் நிலுவையின்றி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version