பிரியாவிடை மடலில் மனமுருகிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

0
141

கடந்த 2017ஆம் வருடம் முதல் தமிழகத்தின் ஆளுநராக பதிலால் புரோகித் செயல்பட்டு வருகின்றார். இவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. அவர் சுமார் ஓராண்டு காலம் வரையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார் அன்றிலிருந்து இன்றுவரையில் தமிழகத்தின் ஆளுநராக தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக அவர் மேற்கொண்டு வந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அவர் என்னதான் தன்னுடைய பணிகளை செவ்வனே செய்து வந்தாலும் கூட தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர் செயல்படவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறது. அதனை செயல்படுத்தும் ஒரு கருவியாக ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதே அந்த கட்சியின் விருப்பம்.

ஆகவே பாஜகவின் விருப்பத்திற்கு சற்றும் ஒத்துவராத பன்வாரிலால் புரோஹித் அவர்களை எப்போது இடமாற்றம் செய்யலாம் என்று காத்திருந்தது மத்திய பாஜக அரசு. இந்த நிலையில் சென்ற வாரம் மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை புதிய தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.
ஆர் என் ரவி என சொல்லப்படும் ரவீந்திர நாராயணன் ரவி காவல்துறை அதிகாரியாகவும், புலனாய்வுத் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்ற காரணத்தால், அவர் மிகவும் திறம்பட செயல்படுவார் என்பது பல நிகழ்வுகளின் மூலமாக மேகாலயாவிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு அரசியல் அனுபவத்தை சாராத ஒருவர் என்ற காரணத்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக அவரிடம் எந்த ஒரு ஒப்பந்தமும் போட முடியாத ஒரு நிலை இருக்கிறது அதோடு அவர் உளவுத் துறையில் பணியாற்றியவர் என்ற காரணத்தால் தமிழக அரசியல் கட்சிகள் செய்யும் சூட்சமங்கள் யாரையும் அவர் மிக எளிதாக கண்காணித்து விடுவார் என்ற காரணத்தால் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இந்த ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு இந்த வாரத்தில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திரன் நாராயணன் ரவி பதவி ஏற்க இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு பிரியாவிடை செய்தி வெளியிட்டு இருக்கின்றார்.அந்த செய்திக்குறிப்பில் பொதுமக்கள் ,அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், உட்பட எல்லா தரப்பினரிடமும் அன்பையும் பாசத்தையும் நான் கண்டுகொண்டேன் இதற்காக தமிழக மக்கள் எல்லோருக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.

அனைவருடைய பொறுமையையும் சோதிக்கும் விதத்தில் பல பிரச்சனைகள் இங்கே எழுந்தன என்பது உண்மைதான். இருந்தாலும் அந்த பிரச்சனைகளின் விளைவுகள் எல்லாத் தரப்பினருக்கும் சாதகமாகவே இருந்தன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில் சட்டப்படியான நிலைப்பாடுகளை நான் முன்னெடுத்து சரியான முடிவுகளை தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு தங்களுடைய ஒத்துழைப்பையும் எனக்கு வழங்கினார்கள். இவை யாவும் எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தை விட்டு நீங்காது என கூறியிருக்கிறார் பன்வாரிலால் புரோகித்.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் கல்வி மேம்பாட்டு நலனை கவனத்தில் கொண்டு ஒரு சில முக்கிய முடிவுகளை நான் மேற் கொண்டேன். தமிழ் நாட்டின் வளமான கலாச்சாரம், ஆன்மீகம், வரலாற்று பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கு ஆளுநர் பொறுப்பு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை நல்கியது. இவற்றுக்கெல்லாம் நன்றி தெரிவிக்க வார்த்தைகளே கிடையாது என தன்னுடைய செய்திக்குறிப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருக்கிறார்.