இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும்! தலீபான்களை கொண்டாடுவது நல்லதல்ல! – நடிகர்!
ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து தலிபான்களின் கட்டுக்குள் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மே மாதம் முதல் வெளியேற ஆரம்பித்து தற்போது அங்கிருந்து முழுவதும் வெளியேறி விட்டனர். எனவே உலக நாடுகள் பலவும் தன நாட்டு மக்களை ஆப்கனை விட்டு வெளியே வந்து கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க படைகள் அமெரிக்க மக்களை முழுவதும் மீட்டு விட்டு செல்ல முயற்சித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் ஆப்கனின் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து, பல்வேறு தரப்பினருடனும் கவலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி திரைப்பட நடிகர் நஸ்ருதீன் ஷா தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அதில் அவர் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததை கொண்டாடுவது ஆபத்தானது எனவும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இதை உணர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உலகம் முழுவதும் கவலைக்குரியதாக விசயமாக இருந்தாலும், இந்திய இஸ்லாமியர்கள் சிலர் காட்டும் இந்த காட்டு மிராண்டி தன கொண்டாட்டங்கள் ஆபத்தானவை எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் சீர்திருத்தம் மற்றும் நவீனத்துவம் வேண்டுமா? அல்லது கடந்த சில நூற்றாண்டுகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர வேண்டுமா? என்று ஒவ்வொரு இந்திய இஸ்லாமியர்களும் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் மக்களை கேள்வி கேட்டுள்ளார்.