ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…
கேரளாவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை தொடர்ந்து சேலத்தில் கொலுசுகளின் ஆர்டர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இதனால் கொலுசு தொழில் உரிமையாளர்கள் ஆர்வமுடன் தயார் செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 14 வகையான விலையில்லா உணவு பொருட்கள் வழங்க கேரளா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கேரளா மாநிலங்களில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் பாலக்காடு மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் துவங்கப்பட்டு வருகிறது.அதன்படி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று ஓணம் பண்டிகைக்கு தேவையான அனைத்து ரேசன் பொருட்களையும் வாங்கி சென்றனர்.
பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 57 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது.மேலும் ரேஷன் கடைகளுக்கு தங்களது ரேஷன் அட்டைகளை கொண்டு வந்து பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட பலர் விலையில்லா பொருட்களை வாங்கி செல்கின்றனர். விலையில்லா இலவச பொருட்களில் சர்க்கரை, மிளகு, தேங்காய் எண்ணெய், முந்திரி பருப்பு, பாசி பருப்பு, துவரம் பருப்பு, கடுகு, சீரகம் உள்பட 14 இலவச பொருட்கள் அடங்கியுள்ளன. வருகிற 31 ஆம் தேதி வரை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.