Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…

 

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அவருடைய பிறந்தநாளான இன்று மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். இவர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக.ஸ்டாலின் உள்பட பல தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்வதாகவும் அவர் பொய் வழக்கில் சிறையில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் “இன்றைய நாள் என்னுடைய பிறந்தநாள் ஆகும். பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு மிக்க நன்றி. இந்தியா நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தரமான கல்வியை கொடுப்போம் என்று இன்று உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.

 

அந்த உறுதிமொழி வலிமையான இந்தியாவை உருவாக்க அடித்தளமாக இருக்கும். இன்று நாம் எடுக்கும் உறுதிமொழி இந்தியாவை நம்பர் 1 ஆக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்க உதவும். அந்த உறுதி மொழியின் அடிப்படையில் செயல்பட்டால் அது மணீஷ் சிசோடியாவை மகிழ்ச்சியடையச் செய்யும்” என்று கூறினார்.

 

Exit mobile version