11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் – மனம் திறந்த நடிகை!

0
84
#image_title

11 வயதில் அஜித் சார்கிட்ட Love propose பண்ணேன் – மனம் திறந்த நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

அஜித் தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆசை, காதல் கோட்டை, வான்மதி, முகவரி, வாலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு முதன் முதலாக நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் ஆசையும், காதல் கோட்டை படமும் தான். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நட்சத்திர நாயகனாக அஜித் உயர்ந்துள்ளார்.

அஜித் ‘நீ வருவாய் என’ படத்தில் நடித்தார். அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண்யா நாக். இவர் ‘காதல்’ படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வருவார்.

இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பேசும்போது,

எனக்கு ஒரு 11 வயது இருக்கும். அப்போ நான் அஜித் சார் நடித்த ‘நீ வருவாய் என’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அப்போது படப்பிடிப்பில் அஜித் சாருக்கும், தேவயாணிக்கும் இடையே ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த இடைவேளை சமயத்தில் அஜித் சார்கிட்ட நேரா சென்றேன். நான் உங்க கூட ஒரு போட்டோ எடுக்கணும்ன்னு கேட்டேன். அதற்கு அஜித் சார், என்னை அண்ணன்னு சொல்லமாட்ற, சார்ன்னு சொல்ல மாட்ற… அப்புறம் எதுக்கு போட்டோ என கேட்டார். அதற்கு நான் எனக்கு உங்ககூட ஒரு போட்டோ வேணும்ன்னு அடம்பிடித்தேன். சரி என்று கேமராமேனை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். அதன் பின் நான் அஜித்தை சாரை பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்போ அஜித் சார் என்னிடம் என்ன என்னை பார்த்துக்கிட்டே இருக்க… என்று கேட்டார்.

உடனே நான் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டா என்று கேட்டேன். உடனே அஜித் சார் சிரித்துக் கொண்டே வெட்கப்பட்டாரு.. நீ சின்ன பொண்ணுன்னு அஜித் சார் சொன்னாரு… உடனே நான் பெரிய பொண்ணா மாறி உங்களை கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்று கலகலப்பாக சின்ன வயது சுவாரஸ்யத்தை பகிர்ந்து கொண்டார்.