20 வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தேன்.. ஆனால் திரும்ப இதற்காகத் தான் ஆரம்பித்தேன்- சூர்யா!!

0
115
I quit smoking for 20 years!! But one day.. Rolex Surya

நடிகர் சூர்யா ஹாலிவுட் ரிப்போர்ட்டர் சேனலுக்கு பேட்டி அளித்த பொழுது, அது தனது ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்தும் பேசி இருந்தார். இக்கதா பாத்திரம் குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ” விக்ரம் ” படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். அதுமட்டுமின்றி விக்ரம் படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசல் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

எனக்கான படம் பிடிப்பு பெரும் அரை நாள் தான் இருந்தது.நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் என்னிடம் எனக்கான டயலாக்ஸ் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான் நான் எந்தவிதமான முன் தயரிப்பினையும் செய்து கொள்ளவில்லை எனவும் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 20 வருடங்களாக என்னுடைய திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. நான் அதை செய்யவே கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பொருத்தவரை, அவன் முழுக்க முழுக்க கெட்டவன்; அப்படிப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் நான் ஏன் நிஜ சூர்யாவை திணிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றும் கூறியுள்ளார்.