கௌதம் வாசுதேவ் மேனன் எழுதிய இயக்கிய திரைப்படமாக 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படம் நான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படம் ஒருவித திரில்லர் திரைப்படம் ஆக விறு விறு என்று சென்றாலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரிதளவில் போற்றினர். இதற்கு சான்று 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தின் வசூலை வேட்டையாடு விளையாடு திரைப்படம் முறியடித்தது.
ஒரு காலகட்டத்தில் கமல் என்றாலே மைக் உடன் நடனம் ஆடக்கூடியவர் என்பது ட்ரேட் மார்க்காக இருந்த நிலையில், இந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் கமலஹாசனுக்கென நடன பாடல் ஒன்றை கொடுக்க கமல் அவர்கள் என்னால் இந்த திரைப்படத்தில் நடனம் ஆட முடியாது என அறவே மறுத்திருக்கிறார்.
ஏனெனில் நடனம் என்பது இவருடைய தொழிலாக தொடங்கிய நிலையில் அதனை அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியாக கொண்டு சென்றதால் இதை விட்டு எப்பொழுது வெளி வருவோம் என்ற எண்ணம் தனக்குள் தோன்றியதாகவும் அதனால் மட்டுமல்லாது இந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் தனக்கு நடன காட்சிகள் வைக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது என்ற காரணத்தால் தான் இந்த திரைப்படத்தில் நடனமாட முடியாது என கௌதம் வாசுதேவ் மேனனிடம் மறுத்துவிட்டதாக கமலஹாசன் தெரிவித்திருக்கிறார்.
கமலஹாசனின் உடைய மறுப்பை ஏற்றுக் கொண்ட இயக்குனர் இந்த திரைப்படத்தை அவருடைய தனிநடையில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். படம் மட்டுமின்றி இந்த திரைப்படத்தில் வரக்கூடிய பாடல்களும் அவ்வளவு அழகாக இன்றுவரையில் ரசிகர்களிடையே கொண்டாடப்படக்கூடிய பாடல்களாக அமைந்திருப்பது இத்திரைப்படத்தின் தனித்துவம்.