ஒரு காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பின்பு அவருடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் தோன்றவே இது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் பலரும் தங்களுடைய பெயர்களில் புதிய கட்சிகளை துவங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் பாக்யராஜின் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்த இயக்குனர் வி சேகர் அவர்கள் நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறார்.
பாக்யராஜ் அசிஸ்டன்ட் மற்றும் இயக்குனர் வி சேகர் தெரிவித்திருப்பதாவது :-
பாக்யராஜ் அவர்களிடம் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்த பொழுது சினிமா துறையில் உள்ளார்கள் பழைய இயக்குனர்களுக்கு அசிஸ்டெண்டாக பணிபுரிந்த பலரும் ஒன்றாக சந்திப்பது வழக்கமான ஒன்று. அவ்வாறு சந்திக்கும் பொழுது ஒரு நாள் ராமராஜனின் அசிஸ்டன்ட் பாக்கியராஜ் அவர்களின் அசிஸ்டன்ட் ஆன நான் பாரதிராஜா அசிஸ்டன்ட் என பலருடைய அசிஸ்டன்ட் ஒன்றாக சேர்ந்து அடுத்தது அரசியலில் யார் நுழையப் போகிறார்கள் என்பது போன்ற பேச்சு வார்த்தைகள் செல்லவே, ஒருவரிடம் ஏன் பாக்யராஜ் அரசியலுக்கு வருகிறார் அவருக்கு வேறு வேலை இல்லையா என்பது போல கேட்க அவர் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு என்ன என்று தான் கேட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்பு ராமராஜன் கட்சியை ஆரம்பிக்க போவதாகவும் பாக்கியராஜ் கட்சி துவங்க இருப்பதாகவும் விஜயகாந்த அவர்கள் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் பலவாறு பேச்சுகள் எழுந்த வண்ணம் இருந்திருக்கிறது. இது குறித்து இது குறித்து வி சேகர் பாக்யராஜிடம் சென்று ஏன் நீங்கள் அரசியலுக்கு வர நினைக்கிறீர்கள் ?? அரசியல் வேண்டாமே ?? என கேட்டதாகவும் அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு அடுத்த அரசியல் வாரிசாக யாரும் இல்லை என்றும் தான் அரசியலில் நின்றால் சரியாக இருக்கும் என்று அவர் கூறியதாகவும் பாக்யராஜ் தெரிவித்ததாக இயக்குனர் விசேகர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
கட்சி ஆரம்பித்த 6 மாத காலத்திற்குப் பின்பு கட்சிக்காக பல செலவுகளை மேற்கொண்டு திடீரென தன் கட்சியினுடைய ஆள் ஒருவரை வேறொருவர் வெட்டிவிட்டார் என்ற செய்தியை அறிந்து வேறு வழியின்றி பாக்யராஜ் அவர்கள் கட்சியை கலைத்து விட்டதாகவும் அதன் பின்பு தன்னுடைய அசிஸ்டன்ட் இடம் சென்று நீ கூறியதோ சரிதான் அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் வீரம் தைரியம் அடிதடி என அனைத்தும் தேவைப்படுகிறது என சிரித்தவாறு தெரிவித்து சென்றதாக பாக்யராஜ் அவர்களின் அசிஸ்டன்ட் சேகர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.