Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா!!

#image_title

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன்! கருத்து தெரிவித்த ஜே பி நட்டா!
தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்துவிட்டு பாஜகா தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெயிவிக்கும் நிலையில் பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்கள் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி.  இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி, சோனியா பிஹானி, யோகிதா பிஹானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானதில் இருந்தே படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடத் தடை செய்யக் கோரி பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்கள் தி கேரளா ஸ்டோரி படத்தை புகழ்ந்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பெங்களூருவில் பார்த்த பாஜக தலைவர் ஜோ பி நட்டா அவர்கள், “வெடி மருந்துகளே இல்லாத புதிய வகையான பயங்கரவாதம் இருக்கின்றது. இந்த பயங்காரவதத்தை தான்  தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இது எந்த மாநிலத்திற்கும் மதத்திற்கும் தொடர்புடையது இல்லை. அனைவரும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Exit mobile version