Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

பிரபல தெலுங்கு நடிகர் தனது மனச்சோர்வு போராட்டங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியில் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு மனச்சோர்வு இருப்பதாகவும் அதை சமாளிப்பது தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பற்றி கூறினார். மேலும் தனக்கு 17 வயது இருக்கும் பொழுது மனச்சோர்வு தாங்காமல் தனது உயிரையே மாய்த்துக்கொள்ள நினைத்ததாகவும் வெளிப்படையாக கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் கூறியிருப்பதாவது,

மனச்சோர்வினால்  எனது போராட்டங்கள் அதிகமாக இருந்தன.ஆனால் நான் அதை எதிர்த்து கடுமையாக போராடினேன். 17 வயதில், தேர்வுகளின் அழுத்தம் காரணமாக எனது மனச்சோர்வு மிகவும் அதிகமாக கூடியது.  என் மூத்த சகோதரனின் (சிரஞ்சீவி) உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னை நானே சுட்டுக் கொண்டு  உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எனது மூத்த சகோதரர் நாகபாபு மற்றும் மைத்துனர் சுரேகா ஆகியோர் என்னை சாவிலிருந்து காப்பாற்றினர். பதறிப்போன என் அண்ணன் (சிரஞ்சீவி) என்னிடம், ‘எனக்காக மட்டும் வாழுங்கள், நீங்கள் எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து வாழுங்கள்’ என்று என்னிடம் கூறினார். அதிலிருந்து, நான் என்னை நானே கற்றுக்கொண்டேன், புத்தகங்கள்ப் படிப்பது, கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் மற்றும் பிற முயற்சிகளில்  எனக்கு நானே ஆறுதலைக் கண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த வெளிப்படையான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Exit mobile version