Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

#image_title

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

முன்னாள் அமைச்சர் ஒருவர் நான் எப்பொழுதுமே அதிமுக கட்சியை சேர்ந்தவன் டா என்று எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக கட்சியின் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் சில கருத்துக்கள் அதிமுக கட்சியையும் கட்சியினரையும் வெறுப்படைய செய்துள்ளது. இதையடுத்து அண்ணாமலை அவர்களை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சி வலியுறுத்தியது. ஆனால் இதை பாஜக ஏற்கவில்லை. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது.

இதையடுத்து செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இனி அதிமுக கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் பொது இல்லை என்றும் பாஜக கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. இதற்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக கட்சியுடனான கூட்டணி உறவை அதிமுக கட்சி முறித்துக் கொண்ட நிலையில் பாஜக கட்சியினாது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுச்சாமி அவர்களை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது என்று தகவல்கள் பரவி வந்தது.

மேலும் அதிமுக கட்சியின் ஏக்நாத் ஷிண்டே வந்து எஸ்.பி வேலுமணி தான் என்று விமர்சனங்கள் எழுந்தது. இவை அனைத்திற்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எஸ்.பி வேலுமணி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து “நான் என்றென்றும் அதிமுக காரன்” என்று பதிவு செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருடைய இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version