Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதல் திருமணம் தான் செய்வேன்! மாப்பிள்ளை பின்னர் அறிவிக்கப்படும் ஸ்ரீதிவ்யா பேட்டி !!

#image_title

காதல் திருமணம் தான் செய்வேன்! மாப்பிள்ளை பின்னர் அறிவிக்கப்படும் ஸ்ரீதிவ்யா பேட்டி
பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் வெளியான ஹனுமான் ஜங்க்சன், யுவராஜு, வீடே ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமகமான நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளியான வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழில் ஜீவா, காக்கிச்சட்டை, வெள்ளக்காரதுரை, ஈட்டி, பெங்களூரு நாட்கள், மருது, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவைத் தொற, பென்சில், காஷ்மோரா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
நடிகை ஸ்ரீதிவ்யா தற்பொழுது நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதிவ்யா திருமணம் குறித்து பேசியுள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதிவ்யா அவர்களிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் “திருமணம் செய்தால் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் முடிவில் தான் இருக்கின்றேன். என்னுடைய காதலர் யார் என்பது பற்றியும் திருமணம் எப்பொழுது என்பது பற்றியும் விரைவில் அறிவிப்பேன்” என்று நடிகை ஸ்ரீதிவ்யா கூறியுள்ளார்.
Exit mobile version