Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் : பாதிக்கப்பட்ட பெண் எழுதிய இறுதிக் கடிதம் !!

ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து, அவர்களை பழிவாங்குவேன் என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்ததாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில், 30 வயதான பெண்ணொருவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னங்குடி என்ற ராஜேந்திரன்(40) அந்த பெண்ணிடம் அவ்வப்போது தவறாக நடக்க முயல்வதும், அதற்காக அந்த பெண் மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ,கடந்த 10-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணை ராஜேந்திரன் வலுக்கட்டாயமாக அருகிலிருந்த தீவனத் தோட்டத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனை தனது தாயிடம் அந்தப்பெண் கூற அவர்கள் காவல்துறையினருக்கு புகார் கொடுத்தனர்.

மேலும் ,இந்த சம்பவத்தினால் மனவேதனையடைந்த அந்த பெண் கடந்த 11-ஆம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அந்த பெண் சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.

அந்த பெண் உயிரிழந்ததில் சந்தேகமடைந்த காவல்துறையினர், சோதனையிட்ட போது அவரது வீட்டில் ஒரு கடிதம் கிடைத்தது .அதில் ராஜேந்திரன் என்பவர் ,தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், தான் இறந்தபின் மீண்டும் ஆவியாக வந்து அவரது குடும்பங்களை பழிவாங்க போவதாகவும், அதில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ,அந்தப் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பெயரில் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அந்த பெண் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற தற்கொலை எண்ணம் வந்தால் அதனை தடுக்கும் வகையில் 104 என்று மாநில உதவி மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கலாம்.

Exit mobile version