Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்-நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது!!

#image_title

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது!
கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், தாய், தந்தை உறவினர்கடன் பேச வைக்கிறேன் என்று பல பேர் ஏமாற்றி பணங்களை மோசடி செய்து வந்தனர். தற்பொழுதும் இந்த ஏமாற்று வேலை நடைமுறையில் இருக்கின்றது. இந்த ஏமாற்று வலைக்குள் படிக்காதவர்கள் மட்டுமில்லாமல் படித்தவர்களும் சிக்கிக் கொண்டு பணத்தை ஏமாறுகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவத்திலும் படித்தவர்  ஏமாந்துள்ளார்.
சென்னையை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச ஆசைபட்டுள்ளார். இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு  அவருக்கு தெரிந்த கேரளாவை சேர்ந்த மந்திரவாதியிடம் சென்றுள்ளார். பிறகு அந்த மந்திரவாதி கூறியபடி சிறிது சிறிதாக 2 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த மந்திரவாதியோ கடைசி வரையில் ஆவிகளிடமோ அல்லது தெய்வங்களிடமோ சென்னையை சேர்ந்த இன்ஜினியரை பேச வைக்கவில்லை.
இதையடுத்து மந்திரவாதி தன்னை ஏமாற்றியதை அறிந்து கொண்ட அந்த இன்ஜினியர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இன்ஜினியர் அளித்த புகாரின்படி அந்த மந்திரவாதியை கைது செய்தனர்.
Exit mobile version