உதயநிதி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

0
104

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாததால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எதிர்கட்சியான திமுக மிகக் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.இதெல்லாம் போதாதென்று தேர்தல் வியூகம் வகுக்க நவீன சாணக்கியன் என்று சொல்லப்படும் பிரசாந்த் கிஷோர் நியமனம் அவர்களை செய்து அவரின் ஆலோசனைப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.நிலவரம் இப்படி இருக்க வெளி நிலவரம் வேறுவிதமாக இருக்கிறது.

தமிழகத்தில் அனேக பகுதிகளில் திமுக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த காத்துக் கொண்டிருக்கிறது அதிமுக செய்த ஊழலை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.ஆனால் இவை அனைத்தும் உண்மையாக இருந்தால் அவருக்கு எதற்காக தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுப்பதற்கு என்று ஒரு அணி என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. சரியோ தவறோ இத்தனை ஆண்டு காலமாக திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டார்.

ஆனால் கிட்டத்தட்ட ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி இது போன்று எந்த ஒரு ஆலோசனை குழுவையும் தனியாக நியமித்து தேர்தலை சந்திக்க வில்லை என்று சொல்லப்படுகிறது.இப்போது கருணாநிதி இல்லாத ஒரு நிலையில், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, தேர்தல் வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோர் அவர்களை நியமனம் செய்து கோடிக்கணக்கில் செலவிட்டு இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல வியூகங்களை வகுத்து வருகிறது எதிர்கட்சியான திமுக.

அப்படி என்றால் ஆளும் கட்சியான அதிமுகவை பார்த்து திமுக பயந்து விட்டது என்று தானே அர்த்தம் என்கிற ரீதியில் தமிழகம் முழுவதிலும் கருத்துக்கள் பரவ தொடங்கியிருக்கின்றன.அப்படி என்றால் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக அரசை குறை கூறிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசை செயல்பட விடாமல் தடுப்பதற்காகவே திமுக இது போன்ற குறைகளை தெரிவிக்கிறது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.இது ஒருபுறமிருக்க ஆளும் கட்சியான அதிமுக மறுபுறம் ஜரூராக தேர்தல் பணிகளை ஆரம்பித்து செய்துவருகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இன்று வரையில் அதிமுக அரசின் மீது மக்களிடையே பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழவில்லை அதுவே அந்த கட்சியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்கிறது.

இதனை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சியான திமுக எப்படியாவது மக்களிடையே அந்த கட்சியை பலவீனம் ஆக்கிவிட வேண்டும் என்ற காரணத்திற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.ஆனால் இதற்கு ஆளும் கட்சியின் தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். ஊழல் செய்தோம் என்று சொல்கிறீர்களே அதற்கான ஆதாரம் எங்கே உங்களுடன் விவாதம் செய்வதற்கு நான் தயார் என்னுடன் விவாதம் செய்வதற்கு நீங்கள் தயாரா என்று சவால் விடுத்து இருக்கிறார்.

ஆனால் இதற்கு எதிர்க் கட்சியான திமுக செவிசாய்க்காமல் குறை சொல்வதையே பிழைப்பாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் திமுக கூட்டணியை ஆதரிக்கும் விதமாக தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்துவரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுவரையில் சுமார் 170 தொகுதிகளை வந்திருக்கிறார். பிரச்சார வாகனத்தில் பயணம் செய்துகொண்டே வலைதளம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதில் தெரிவித்திருக்கிறார்.

நடிகை குஷ்பூ சேப்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட அவரை எதிர்த்து நீங்கள் நின்றிருந்தால் சரியான போட்டியாக இருந்திருக்கும் அல்லவா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்ட போது அது தொடர்பாக நீங்கள் அவரிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். தொண்டர்கள் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு தமிழ்நாடு முழுவதிலும் நான் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று தலைவரிடம் தெரிவித்து இருந்தேன். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற மூத்த தலைவர்கள் விருப்பப்பட்டதன் காரணமாக, இந்த தொகுதியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் இங்கே போட்டியிடுகிறேன். தமிழகம் முழுவதிலும் நான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தெரிவித்திருக்கிறார்.

வாரிசு அரசியல் தொடர்பாக கேள்வி எழுப்பிய சமயத்தில் மக்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற இயலும் நான் வெற்றி பெற்று என்னுடைய தொகுதி மக்களுக்கு எவ்வாறு பணியாற்றுகிறேன் என்று பார்த்துவிட்டு அதன் பிறகு இதுதொடர்பாக பேசுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பிய சமயத்தில், நான் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது. ஆகவே நான் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் மூத்த தலைவர்களின் அறிவுறுத்தல்களும் வற்புறுத்தல்களும் இருந்தால் நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.