எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படி நடிக்க மாட்டேன்.. எனக்கு கதை இந்த மாறி இருக்கணும் – நித்யாமேனன்!!

0
110
i-will-not-choose-such-films-i-will-not-act-in-such-films-actress-nithya-menon-interview

தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து நம் மனதை கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்று பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி நடையை உருவாக்கியுள்ளார்.

நடிகை நித்யா மேனன் இளைய தளபதி விஜய்யுடனும் மெர்சல் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனுசுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் “ஃபிலிம் ஃபேர்” விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனன் தான் எவ்வாறு ஒரு படத்தினை தேர்வு செய்வேன் என்பதனை பற்றி பேட்டி அளித்துள்ளார். அது பின்வருமாறு :-

நான் தேர்வு செய்யும் படத்தில் எனது கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட வேண்டும் என்று நினைத்து நான் கதாபாத்திரத்தை தேர்வு செய்ய மாட்டேன். அக்கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சியை தந்தால் மட்டுமே நான் அதனை தேர்வு செய்வேன்.

அதிக பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கப்படும் போது அதில் கதாபாத்திரம் சரி இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன். அதற்கு மாறாக சிறிய பட்ஜெட் ஆக இருந்தாலும் கதை நன்றாக இருப்பின் அதில் நான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஒரு நடிகைக்கு முக்கியமான விஷயமாக நான் கருதுவது, நாம் நடிக்கக்கூடிய படத்தில் வழங்கப்படும் கதாபாத்திரத்தில் நமக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அதனை தேர்வு செய்ய வேண்டும் என்பதே ஆகும்.