தமிழகத்தின் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வணக்கம் எல்லோரும் நலமா? இன்னும் சிறிது நாட்கள் தான் தேர்தல் வரவிருக்கிறது இந்த காணொளி மூலமாக ஒரு சில விவகாரங்களை எல்லோரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
என்னுடைய மனதில் பட்டதை இப்போது நான் வெளிப்படையாக பேசவிருக்கின்றேன் இது பாசிச சக்திகளுக்கு, தமிழ் மக்களுக்கும், இடையில் நடக்கின்ற ஒரு யுத்தம் என தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் ஒரு கட்சி ஒட்டுமொத்தமாக பறித்துக்கொண்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு அனைத்தும் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கின்றது.
மாநில உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும், தவறு செய்தது யாராக இருந்தாலும் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் இந்து மதத்திற்கு எதிரானது திமுக என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள், ஆகவே நான் தெளிவாகச் சொல்கிறேன். திமுக ஆட்சியில் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் அனைத்து மத மக்களுக்கும் சமமான மரியாதை வழங்கப்படும், அனைவருடைய மத நம்பிக்கைகளும் மதிக்கப்படும் சமத்துவம், சமூக நீதி உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
லஞ்சம் ஊழல் உள்ளிட்டவை இல்லாத நேர்மையான ஆட்சி தான் என்னுடைய முதன்மையான நோக்கம் என் சுயநலம் கருதி நான் யாருடைய காலிலும் சென்று விழ மாட்டேன் என்று மறைமுகமாக எதிர்க்கட்சித் தலைவரை சாடியிருக்கிறார் முதலமைச்சர்.
அதேபோல சுயநலம் கருதி தமிழக மக்களுடைய உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இதெல்லாம் என்னுடைய மனப்பூர்வமான உறுதி மொழிகள், இவற்றை மீறி நான் நடந்தால் என்னை நீங்கள் நேரடியாகவே கேள்வி எழுப்பலாம், என்று உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.