Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

#image_title

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

 

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பதிலாக நான் கிணற்றில் குதித்து விடுவேன் என்று சமீபத்திய பேட்டியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  அவர்கள் கூறியுள்ளார்.

 

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நேற்று அதாவது ஜூன் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாராவில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் சிச்கர் அவர்கள் தன்னை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு கூறியதை நினைவு கூர்ந்தார்.

 

இதையடுத்து அந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் “ஸ்ரீகாந்த் சிச்கர் அவர்கள் ஒரு முறை ‘நீ நல்ல கட்சி தொண்டன். அதுமட்டுமில்லாமல் நல்ல தலைவன். நீ காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது’ என்று கூறினார். அதற்கு நான் ஸ்ரீகாந்த் சிச்கர் அவர்களிடம் நான் கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன் என்றேன்.

 

ஏனெனில் எனக்கு பாஜக கட்சி மீதும் அதன் சித்தாந்தத்தின் மீதும் அதிக நம்பிக்கை இருந்தது. எனவே அதற்காக தொடர்ந்து உழைப்பேன். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து பல முறை உடந்துள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றை நாம் என்றும் மறக்ககூடாது. கடந்த காலம் மூலமாக நாம் எதிர்காலத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

 

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் வறுமையை ஒழிப்போம் என்று முழங்கி வந்தது. ஆனால் அவர்கள் 60 ஆண்டுகால ஆட்சியில் தனது சொந்த லாபத்திற்காக கல்வி நிறுவனங்களைத் தான் திறந்தார்கள். பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வையில் நாடு நல்ல பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.

 

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகால ஆட்சியில் இருந்து செய்த நலத்திட்டங்களை விட பாஜக அரசு ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகமான நலத் திட்டங்களை நாட்டுக்கும் நமக்கும் செய்துள்ளது” என்று மஹாராஷ்டிரா மாநிலம் பண்டாராவில் நடந்த 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டதில் மததிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேசினார்.

 

Exit mobile version