சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தன் சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக விஜய் டிவியில் சேர்ந்து அதன்பின் தொகுப்பாளராக மாறி சில வருடங்கள் தொகுப்பாளராகவே பணியாற்றி அதன்பின் வெள்ளி திரைக்கு நடிகர் தனுஷ் அவர்களின் உதவியால் நுழைந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பணத்தை விடவும் மரியாதை தான் முக்கியம் அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கூறி இருக்கிறார். இது குறித்து விரிவாக காண்போம் :-
மிகவும் குறுகிய காலகட்டத்தில் மேலே உயர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார். இவர் வளர்ச்சியை பார்த்து பலர் பொறாமைப்படுவார்கள் என்று நடிகர் அஜித்தே இவரிடம் சொன்னதாக சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
சினிமா துறையில் தன் பயணத்தை தொடங்கிய பொழுது கதாநாயகனாக காதல் காட்சிகள் மட்டும் நடிக்காமல் அதனோடு காமெடியையும் கலந்து நடித்து வந்தவர் சிவகார்த்திகேயன். ஆனா தற்போது வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் அதற்கு முற்றிலும் மாறாக முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கையினை நம் மனதில் பதிய வைக்கும் அளவிற்கு சிவகார்த்திகேயனுடைய நடிப்பு இருந்துள்ளது.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் எனக்கு ஆரம்பத்தில் விஜய் டிவியில் பெரிய சம்பளம் எல்லாம் கிடையாது. ஆனால் மரியாதை இருந்தது. எனக்கு ஒரு மேடை கொடுத்தார்கள், அதுவே போதும். எனக்கு கிடைச்ச பிளாட்பார்மை வச்சு ஏதாவது ரெவென்யு பண்ணிக்கிறதுக்கு முயற்சி செய்தேன் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில்,நான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போகும் போது அங்கு நிலைமை வேறுவிதமாக இருந்தது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்தவரிடம் கேட்டால் மட்டுமே தன்னுடைய வலி புரியும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்.