Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பாட்டை எழுத மாட்டேன்!! பாதியில் விட்டு சென்ற வைரமுத்து!!ஹிட்டான பாடல்!!

I will not write this song!! Vairamuthu left in the middle!! Hit song!!

I will not write this song!! Vairamuthu left in the middle!! Hit song!!

Cinema news: நம் மக்களுக்கு தமிழ் திரைப்படங்களில் மிக அழகான பாடல்களை கொடுத்த பாடலாசிரியர் வைரமுத்து என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் வெற்றி கொடி கட்டு படத்தில் “நான் பாடல் பாட மாட்டேன்” என கோபத்தில் கிளம்பி விட்டார்.

இளைஞர்கள் வெளிநாட்டு வேலையின் மீது உள்ள மோகத்தை விட்டு விட்டு, தனது சொந்த ஊரிலேயே பெரிய அளவில் பாடுபட்டால் நிச்சயம் முன்னேறி விடலாம் என்கிற ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படம் தான்  “வெற்றி கொடி கட்டு”. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை மீனா மற்றும் நடிகை மாளவிகா இருவரும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.

வெவ்வேறு பாடல் ஆசிரியர்கள் மூலம் எழுதப்பட்டது.  “சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா” என்கின்ற பாடலுக்கு வரிகள் எழுதியது தேவா. “லட்ச லட்சமா பணம் வரப்போகுது” என்ற பாடலை எழுதியது ரவிசங்கர். “வள்ளி வள்ளி” என்கின்ற பாடலை எழுதியது கலைக்குமார், “தில்லேலே தில்லேலே” என்கிற பாடலை எழுதியது வைரமுத்து. அதேபோல் பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆன “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்ற பாடலை எழுதியது பா. விஜய்.

ஆனால் உண்மையில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலை தொடங்கி வைத்தது வைரமுத்து தான். ஏனென்றால் தமிழ் மீது வைரமுத்துவிற்கு காதல் அதிகம். இந்த நிலையில் “கருப்பு தான் எனக்கு புடிச்ச வர்ணம்” என பாடல் வரிகள் அமைய வேண்டும் என கூறினார். ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தையும் கலந்து கொள்ளலாம் என கூறியதால் அந்த பாடலை மேற்கொண்டு எழுத வைரமுத்து மறுத்தார்.

Exit mobile version