Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘நான் வெளிப்படையாக எழுதுவேன்”” கண்ணதாசன் அப்படி அல்ல!” – வாலி

#image_title

அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.

 

கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் எத்தனையோ ஆயிரங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார். அந்த அனைத்து பாடல்களும் தேன் சுவை சொட்ட சொட்ட நம்மை நனைய வைத்திருக்கிறது என்பது மிகையாகாது

 

கவிஞர் வாலியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு கவிதைகளையும் அப்படி நாம் ரசித்திருப்போம். இவரது இயற்பெயர் வாலி கிடையாது. இவரது இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஓவியம் நன்றாக வரைவார். அதனால் தன் நண்பனை மாலியை போலவே தான் சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று எண்ணி தன்னுடைய பெயரை வாலி என்று அவரை மாற்றிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

 

இதுவரை இவர் 15,000 பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் அஜித் தனுஷ் என அனைவருக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

 

ஒரு சமயம் பேட்டி அளித்த வாலி,” நான் மிகவும் எளிய நடையில் எழுதுவேன்”” ஆனால் கண்ணதாசன் மக்களுக்கு புரியும் படி எழுத மாட்டார் மறைமுகமாக ஒன்றை எழுதுவார்” “அதை என்னை போல புலவர்கள் கவிஞர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியுமே” தவிர பாமர மக்களுக்கு இந்த பாடலின் அர்த்தங்கள் புரியாது.

 

உதாரணத்திற்கு எம்ஜிஆருக்கு பாடலை எழுதும் பொழுது நான் மிகவும் தெளிவாக வெளிப்படையாக எழுதுவேன். ஆனால் கண்ணதாசனும் ஒரு படத்தில்” நீ சேரனின் உறவா? செந்தமிழின் நிலவாஎன்று குறிப்பிட்டுள்ளார் ” இந்த பாடலின் அர்த்தம் சேரன் என்றால் மலையாளம் என்று பெயர் நீ மலையாள அவர்களுக்கு உறவா என்று மறைமுகமாக அவர் இந்த பாடலில் தெரிவிப்பார். அதன் உள்ளர்த்தம் எங்களுக்கு புரியும் மக்களுக்கு புரியாது.

 

இவ்வாறு வாலி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

 

Exit mobile version