சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

0
123

சிவில் சர்வீஸ் தேர்வில் 286- ஆம் இடம்பிடித்த மதுரையை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஐஏஎஸ் பதவி மறுக்கப்பட்டதனை தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மணிநகரை சேர்ந்த எம் பூர்ண சுந்தரி என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 286 இடத்தை பிடித்தார். ஆனால் அவருக்கு ஐஏஎஸ் பதவி வழங்காமல் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி வருமான வரி )பணியிடம் ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே ஐஏஎஸ் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் சென்னை கிளையில் எம் பூரணசுந்தரி  மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு  ஒபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி ஐஏஎஸ் பதவி வழங்கியிருக்க வேண்டும் .ஆனால்  இவருக்கு  ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டது.ஓபிசி பிரிவில் பூரண சுந்தரியை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கிளையின் தலைவரான எஸ்.என். டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி .பி .சங்கர் உள்ளிட்டோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கண்ணன் ,எஸ்.பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிட்டனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 21.09.2020 – அன்று மத்திய அரசு பணி ஒதுக்கீடு செய்தது என்றும், இறுதி தீர்ப்புக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கட்டப்படும்  என உத்தரவிட்டு, இந்த விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.