ICE CREAM விரும்பிகளே.. நீங்கள் சாப்பிடுவது ஐஸ் க்ரீம் அல்ல விஷம்!! இதை கண்டறிவது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளை பிரியம்.சுவையாகவும்,குளிர்ச்சையாகவும் இருப்பதினால் இதை பலர் விரும்புகின்றனர்.ஐஸ் க்ரீமில் வென்னிலா,ஸ்ட்ராபெர்ரி,பட்டர் ஸ்காட்ச்,சாக்லேட் என்று பல வெரைட்டி இருக்கிறது.பால் அல்லது க்ரீம் பயன்படுத்தி ஐஸ்க்ரீம்கள் தயாரிக்கப்படுகிறது.
ருசியாக இருக்கும் இந்த ஐஸ்க்ரீம்கள் அதிக கலப்படம் நிறைந்தவை என்பது பலருக்கும் தெரிவதில்லை.ஐஸ்க்ரீம்கள் அதிக இனிப்பாக இருக்க பிரக்ட்டோஸ் கார்ன் சிரப்,குளுக்கோஸ் சிரப் பயன்படுத்தப்படுகிறது.
வாயில் வைத்ததும் கரையும் ஐஸ்க்ரீம்களில் நுரை போன்ற அமைப்பிற்கு கொண்டு வர சோப்பு,சலவை சோடா போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஐஸ்க்ரீம் அடர்த்தியாக காட்சியளிக்க தாவர எண்ணெய்,டால்டா போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் பயன்படுத்தப்படுகிறது.ஐஸ்க்ரீம்கள் உருகாமல் இருக்கவும்,கெட்டுப்போகாமல் ப்ரஸாக இருக்கவும் கம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்டுகிறது.
ஐஸ்க்ரீமில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி?
நீங்கள் வாங்கும் ஐஸ்க்ரீமில் சிறிது எலுமிச்கை சாறு சேருங்கள்.ஐஸ்க்ரீமில் நுரைத்து பொங்கினால் அதில் சோப் போன்ற கலப்பட பொருள் கலப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல் ஐஸ்க்ரீமில் சிறிது வெந்நீர் மற்றும் HCL சேர்க்கவும்.இவ்வாறு செய்தால் அதன் நிறம் மாறத் தொடங்கும்.இதை வைத்து ஐஸ்க்ரீமில் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து கொள்ள முடியும்.