உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!! 

0
249
ice-creams-that-not-only-cool-the-body-but-also-give-health

உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!! 

சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் தப்பிக்க நிச்சயம் தொண்டைக்கு குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். இனி கோடை காலங்களில் மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தோன்றினால் உடனே ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுங்கள்.

பொதுவாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஆனால் யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து கூறுவதில்லை. எனவே ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி பதப்படுத்தப்படாத ஐஸ்கிரீம்களை சாப்பிடுவதால், நம் உடலுக்கு தேவையான கால்சியம், புரம் மற்றும் வைட்டமின்ஸ் கிடைக்கிறது. மேலும், மன அழுத்தம், மன சோர்வு நீங்கி ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி ஐஸ்கிரீமில் உள்ள சர்க்கரை மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

கோடைகாலங்களில் நம் உடலில் நீர்ச்சத்து கணிசமாக குறைந்து விடும். எனவே ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் மூலம் நீர்ச்சத்து குறையாமல் சீராக பராமரிக்கலாம். ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தேவையற்ற பசி ஏற்படாது. எனவே அளவாக சாப்பிட்டு உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.

சில ஐஸ்கிரீம் வகைகளில் நம் குடலுக்கு நன்மை செய்யும் ப்ரோபயாடிக்ஸ் இருக்கும் இது ஜீரண ஆற்றலை மேம்படுத்த உதவும். எனவே வீட்டில் செய்த மற்றும் தீங்கு விளைவிக்காத ஐஸ்கிரீம்களை அளவாக உட்கொண்டால் எந்த பிரச்சனையும் வராது. ஒருவேளை காய்ச்சல், சளி பயம் இருந்தால் ஐஸ்கிரீம் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து சூடான நீரை பருகுங்கள்.