ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

0
117

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப்பெரிய ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விகிதங்களை பற்றி தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தின்படி வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 4.50% முதல் 6.75% வரையிலான வட்டியைப் பெறுவார்கள். 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 7.15% வட்டியைப் பெறுவார்கள்.

ஐசிஐசிஐ வங்கி மொத்த எஃப்டிக்கான விகிதங்கள்:

– 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை – 4.50%
– 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 5.25%
– 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை – 5.50%
– 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 5.75%
– 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை – 6.25%
– 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை – 6.50%
– 271 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 6.65 சதவீதம்
– 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை – 7.10 சதவீதம்
– 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை – 7.15%
– 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை – 7%
– 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை – 6.75%

ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் டிசம்பர் 16, 2022 முதல் பொருந்தும். இதன் மூலமாக சாதாரண மக்கள் 15 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்டி கணக்குகளுக்கு அதிகபட்சமாக 7% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். மூத்த குடிமக்களின் 15 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டி கணக்குகளுக்கு அதிகபட்சமாக 7.50% வட்டி விகிதத்தை வழங்கும்.