மத்திய அரசு சார்பில் தனுஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது!

0
183
#image_title

மத்திய அரசு சார்பில் தனுஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு ஐகான் விருது!

சென்னையில் கடந்த சில நாட்களாக தக்ஷின் – தென்னிந்திய ஊடக கேளிக்கை மாநாடு நடைபெற்று வந்தது, இதில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறந்த படைப்பாற்றல் கொண்ட திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்குவது வழக்கம்.

இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்பு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விளையாட்டு மற்றும் திரைத்துறை ஆகிய 2 துறைகளும் உலகளாவிய எல்லைகளைத் தாண்டி பயணிக்கக் கூடியவை. அடுத்த தலைமுறைக்கான இந்திய திரைத்துறை வல்லுநர்களை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கு இந்திய திரைப்படத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

இன்றைய திரைப்படங்கள் சமூக விழுமியங்களையும் கலாசாரங்களையும் சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகளையும் உண்மைத்தன்மையோடு பிரதிபலிக்கின்றன. புதிய இந்தியாவை உலகளாவிய ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நமது பிராந்திய திரைப்படங்களின் உள்ளடக்கங்கள், உந்து சக்தியாகவும் பகிரக் கூடியவையாகவும் அமைய வேண்டும்.

இளைஞர்களின் மனப்போக்கை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்ததாக கதைக்களங்கள் அமைய வேண்டும். உலகிலேயே மாபெரும் திரை துறையாக விளங்கும் இந்திய திரைத்துறை மிகச் சிறந்த உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய மையமாக விளங்குவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறது.

பைரசி என்று அழைக்கப்படும் கலை திருட்டை முற்றிலுமாக தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. உலக அளவில் கலைத் திருட்டால் ஆண்டு தோறும் திரைத்துறைக்கு சுமார் 20 ஆயிரம் கோடி டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

சர்வதேச அங்கீகாரம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைத்துறை தனது படைப்பாற்றல், தயாரிப்பு திறன், தொழில்நுட்ப வல்லமை, செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரங்களை பெற்று வருகிறது என பேசினார்.

விழாவில் நடிகர் தனுசுக்கு யூத் ஐகான் விருதையும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஐகான் விருதையும் அனுராக் தாக்குர் வழங்கினார். சிரஞ்சீவிக்காக நடிகை சுஹாசினி விருதை பெற்றுக் கொண்டார்.