ஐகோர்ட்: வரப்போகும் மெட்ரோ ரயில்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆயிரம் விளக்கு விநாயாகர் கோவில் நகர்த்த அதிரடி உத்தரவு!!
சென்னையில் தற்போதுள்ள முதல் கட்டம் மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது மக்களால் பெருமளவு வரவேற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபாய் 63,246 கோடி ஒதுக்கப்பட்டு இரண்டாம் கட்ட மெட்ரோ பணியானது செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் நீண்ட வழித்தடம் என சென்னையின் முக்கிய இடங்களை இணைக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையானது மீனம்பாக்கம் என தொடங்கி பூந்தமல்லி வரை இடையில் உள்ள அனைத்து இடங்களையும் ஒருகினைக்கும் வகையில் அமைய உள்ளதாக கூறியுள்ளனர்.
கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் வரை இந்த வழித்தடம் இருக்கும். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைவதுண்டு. இந்த வழித்தடத்தை அமைப்பது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் இடிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறினர். ஆனால் இதற்கு ஆலையம் காப்போம் கூட்டமைப்பின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தார்.
மேற்கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, கோயில்களுக்கோ அல்லது கோவில் கோபுரங்களுக்கோ எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் மெட்ரோ பணிகள் செயல்படுத்த ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி ஆய்வு செய்ததில், மெட்ரோ பணிக்காக கட்டாயம் 30 அடி ஆழமானது பூமிக்கு அடியில் தோண்டப்பட வேண்டும். அப்படி தோண்டப்படும் பட்சத்தில் ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் ராஜகோபுரமானது சரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த ராஜகோபுரம் சாயாமலிருக்க மெட்ரோ பணிகள் முடியும் வரை இதனை கோவிலின் உட்புறத்தில் நகர்த்தி வைக்கலாம். மேற்கொண்டு மெட்ரோ பணிகள் முடியும் நேரத்தில் பழைய நிலைக்கு ராஜகோபுரங்களை வைத்து விடலாம். அதுமட்டுமின்றி அதற்குரிய கும்பாபிஷேகமும் நடத்த வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி மெட்ரோ பணிக்காக கோவில்களில் பாதிப்பை உண்டாக்காத வகையில் மெட்ரோ வழித்தடங்கள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.