Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!

தலைநகர் சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சென்னை காவல் எல்லைக்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு இபதிவு கட்டாயம் என்று நேற்றையதினம் காவல்துறை அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் இ-பதிவு வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. ஊடகங்கள், மருத்துவமனை பணியாளர்கள், என்று அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களிடம் இ பதிவு கேட்டு காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தியதன் காரணமாக, இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இ-பதிவு முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களிடம் காவல்துறையினர் இப்பதிவு கேட்கக் கூடாது அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் காவல்துறையினர் பதிவு தொடர்பாக கேள்வி எழுப்பியதால் மக்களிடையே பெரும் குழப்பம் உண்டானது.

இவ்வாறான சூழலில், நேற்று இரவு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக வெளியிட்ட இருக்கின்ற ஒரு அறிவிப்பில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், தலைமைச்செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள் அதோடு வழக்கறிஞர்கள், போன்றவர்கள் பணியின் காரணமாக, பயணம் மேற்கொள்ளும்போது வாகன சோதனை சமயத்தில் காவல்துறையிடம் அடையாள அட்டையை காண்பித்தால் போதும் அவர்களுக்கு இ- பதிவு கட்டாயமில்லை அடையாள அட்டை வெளியில் தெரியும்படி அணிந்து இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

முக்கிய சாலைகளில் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்வதற்கு பிரத்தியேக ஏற்பாடு தயார் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version