உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி – செய்வது எப்படி?

0
76
#image_title

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி – செய்வது எப்படி?

பாசிப்பயிறில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைப்பயிறை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும்.
இவற்றில் சோடியம் குறைவதாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். முளை கட்டிய பச்சைப் பயற்றை சாப்பிட்டு வந்தால் செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

சரி வாங்க… பாசிப்பயிற்றை வைத்து எப்படி இட்லி செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 2 கப்

இட்லி அரிசி – 4 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – 3 மேசைக்கரண்டி

தனியா – 2 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் – 4

சிறிய வெங்காயம் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பாசிப்பயிற்றையும், இட்லி அரிசியையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பிறகு மிக்ஸியில் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

அரைத்து வைத்த மாவில் உப்பு சேர்த்து 2 மணிநேரம் அப்படியே வைக்க வேண்டும்.

பிறகு இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான பாசுப்பயிறு இட்லி ரெடி.