இரண்டு வருடமாக கட்சிக்கு வராதவர் தற்போது பேசினால் அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியில் 99.9% வைகோ உடன் உள்ளனர். இந்த இயக்கம் பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறது இதையும் கடந்து செல்வோம் என திருப்பூர் துரைசாமி கடிதத்திற்கு வைகோ பதில் அளித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயாகத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் மே 1 தொழிலாளர் தின வரலாறு குறித்து விரிவுரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் மதிமுக கழக செயலாளர் துரை வைகோ கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ,
விரைவில் கழகத்தினுடைய பொதுக்குழு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 70% கழகத்தின் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. எந்த ஒரு சிறு சலசலப்பு இல்லாமல் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. பலர் ஒன்றும் இல்லாத செய்தியை செய்தியாக்க முயற்சித்தார்கள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லாமல் போயிட்டு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பொதுக்குழுவிற்கு பிறகு மிக வேகமாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
திருப்பூர் துரைசாமியின் அறிக்கைக்கு பதிலளித்த வைக்கோ, இரண்டு வருடமாக கட்சிக்கு வராதவர் தற்போது பேசினால் அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியின் 99.9% வைகோ ஓடு உள்ளனர். பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறது இதையும் கடந்து செல்வோம் என வைகோ பதிலளித்தார்.