Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடை இரண்டும் உரசி உரசியே புண்ணாகிடுச்சா? பீல் பண்ணாதிங்க.. இந்த எண்ணெயை அங்கு தடவி சரி பண்ணுங்க!!

உங்களில் சிலருக்கு தொடை பகுதி மட்டும் சற்று பெரியதாக இருக்கும்.இதனால் நடக்கும் பொழுது தொடைகள் உரசி அதிக வியர்வை வெளியேறும்.சிலருக்கு தொடைகள் உரசும் இடத்தில் காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த காயங்கள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துவதால் நடப்பதில் அதிக சிரமத்தை சந்திக்க சந்திக்க நேரிடுகிறது.இவ்வாறு உரசி காயமான தொடை பகுதியை எளிமையான முறையில் குணப்படுத்தும் முறை இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
2)விளக்கெண்ணெய் – அரை தேக்கரண்டி
3)கற்றாழை துண்டு – ஒன்று

செய்முறை விளக்கம்:-

1.ஒரு கற்றாழை மடலை துண்டாக நறுக்கி அதில் இருந்து ஒரு பீஸ் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இந்த கற்றாழை துண்டின் மீதுள்ள தோலை மட்டும் சீவி அப்புறப்படுத்திவிடுங்கள்.

2.பிறகு கற்றாழை ஜெல்லை பாத்திரத்தில் போட்டு இரண்டு முதல் மூன்று முறை அலசுங்கள்.கற்றாழை ஜெல்லில் வெளியேறும் மஞ்சள் திரவம் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

3.அதன் பிறகு இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜார் ஒன்றில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

5.எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை அதில் போட்டு குறைவான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

6.கற்றாழை ஜெல் எண்ணெயில் நன்கு மிக்ஸாகி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த பேஸ்ட்டை ஆறவைத்து தொடை பகுதியில் தடவினால் கருமை புண்கள் ஆறிவிடும்.

7.தினமும் இரவு நேரத்தில் வெறும் தேங்காய் எண்ணெயை மட்டும் தொடை பகுதியில் பூசி வந்தால் அவ்விடத்தில் சதைகள் உரசி உண்டாக காயங்கள் சீக்கிரம் ஆறிவிடும்.

8.அதேபோல் தேங்காய் எண்ணையுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து தொடை பகுதியில் பூசினால் புண்கள் ஆறிவிடும்.

9.சுத்தமான துணி கொண்டு அடிக்கடி தொடை பகுதியை தேய்க்க வேண்டும்.இதனால் தொடை பகுதியில் வியர்வை புண்கள் உருவாவது தடுக்கப்படும்.

Exit mobile version