Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு?

108-ஐ தொடர்பு கொண்டால்
ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தின் அவசரகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களுக்கான மெயின் கட்டுப்பாட்டு அறை சென்னையில்தான் அமைந்துள்ளது.ஆனால் தற்போது சென்னையில் அதி தீவிரமாக பரவி வரும் கொரானாத் தொற்று,ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் வேலை செய்யும் ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை.

தற்போது அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் உதவி மருத்துவர்களும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் அங்கு குறைந்த அளவிலான பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இதனால் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே அழைப்பை ஏற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையில் சென்னையில் கொரோனவைரஸ் தொற்றுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 24 மணி நேரம் சேவையைப் பெறுவதற்கு 044-40067108 என்ற சேவை எண்ணும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.ஆனால் ஏற்கெனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் 108 கட்டுப்பாட்டு அறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மக்களிடம் கருத்து கேட்டபோது அவசர தேவைக்கு 108-ஐ தொடர்பு கொண்டால்
ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது,மேலும் இணைப்பில் நீண்ட நேரம் இருக்க வேண்டியதாக இருக்கின்றது,சில நேரங்களில் இணைப்பில் நீண்ட நேரம் இருந்தாலும் லைன் கிடைப்பதும் இல்லை. ஆம்புலன்ஸ் வருவதற்கும் மிகவும் காலதாமதம் ஆகிறது. இதனால் தாங்கள் வாடகை கார் அல்லது ஆட்டோக்களை பிடித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆம்புலன்ஸ் சேவையை தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version