ஜெகத்ரட்சகன் எடுத்த அதிரடி முடிவு! மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றம்!

0
146

திமுகவை சார்ந்த ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ,இதனை மறுத்த அவர் நான் இறக்கும் வரையில் திமுகவில் தான் இருப்பேன் என உறுதியுடன் கூறி வந்தார். அதற்கு பலன் அளிக்கும் விதமாக ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநில முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் திமுகவின் தலைவர் ஸ்டாலின்..

பாண்டிச்சேரி மாநிலத்தில் தற்சமயம் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியில் அமரவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறது. எனவே பாண்டிச்சேரியின் தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவுசெய்து அறிவிப்பார் என்று அறிவித்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

அதோடு பாண்டிச்சேரியில் இருக்கின்ற 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடையும் இதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன் அவ்வாறு செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

பாண்டிச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தால் எல்லோரும் வியக்கும் விதமாக ஒரு மாற்றம் ஏற்படும் எனவும், பாண்டிச்சேரியில் வேலைவாய்ப்பு இப்பொழுது சரிவர கிடைக்கவில்லை திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும், அவர் தெரிவித்து வரும் காரணத்தால் இப்போதைய காங்கிரஸ் ஆட்சியையும் அவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பதால் புதுச்சேரி மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அவருடைய இந்த பேச்சால் பாண்டிச்சேரி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உருவாகி விட்டதா? என்ற பேச்சுக்களும் எழுந்து வருகின்றது இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது தொடர்பாக பேசுவதற்கு அவர் இசைவு அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.