இந்த முறையில் நெய்யை சேமித்து வைத்தால் ஆண்டுகள் பல ஆனாலும் கெடாமல் இருக்கும்!!

0
69
If ghee is stored in this way, it will not spoil for many years!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக் கூடிய பால் பொருள் நெய்.பால் பிடிக்காதவர்கள் கூட நெய்யை ருசித்து உண்பார்கள்.நெய் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது இனிப்பு பண்டங்கள் தான்.

மைசூர் பாக்,லட்டு,ஜிலேபி,பொங்கல் போன்ற இனிப்பு பொருட்களின் சுவையை அதிகரிக்க நெய் சேர்க்கப்படுகிறது.இந்த நெயில் கொழுப்புச்சத்து,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

நெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,ஈ,கே மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடல் எடையை குறைக்க என்று பல்வேறு வகைகளில் நெய் பயன்படுகிறது.

நெய் தயாரிப்பது எப்படி?

பசும் பாலில் தயிர் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதை கடைந்து வெண்ணெய் எடுக்கவும்.நீங்கள் குறைந்த அளவு தயிர் போட்டால் குறைவான அளவே வெண்ணெய் கிடைக்கும்.ஆகையால் தினமும் எடுக்கும் வெண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்து பதப்படுத்த வேண்டும்.

ஓரளவிற்கு வெண்ணெய் சேர்ந்ததும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஐஸ்கட்டிகள் சேர்த்து மைய்ய அரைக்கவும்.இப்படி செய்தால் வெண்ணெய் நன்கு திரண்டு வரும்.பிறகு இதை வாணலியில் போட்டு நெய் காய்ச்சவும்.பிறகு வாசனைக்காக சிறிது முருங்கை கீரை சேர்த்தால் சுவையான நெய் தயார்.

நெய் பராமரிப்பது எப்படி?

நெய்யை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை கெட்டப்போகாமல் இருக்கும்.

காற்றுப்புகாத பாத்திரத்தில் நெய்யை சேமித்து பயன்படுத்தி வந்தால் ஆறு மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

ப்ரீசரில் நெய்யை வைத்து பயன்படுத்தி வந்தால் நீண்ட வருடங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.