இன்றைய கால வாழ்க்கை முறை கடந்த காலங்களைவிட மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.லைஃப் ஸ்டைல்,உணவு என்று அனைத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் தற்பொழுது பின்பற்றி கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது.
தற்பொழுது பின்பற்றப்படும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் காரணிகளால் பெண் உடல் அளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைந்துவிடுகின்றனர்.
நமது அம்மா காலத்தில் பெண் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது பாஸ்ட்புட்,ஜங்க்புட்,இனிப்பு பொருட்கள் போன்றவற்றால் பெண் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் பருவத்தை எட்டி முடங்கிவிடுகின்றனர்.
முதலில் பெண் குழந்தைகளை நன்றாக விளையாட வைக்க வேண்டும்.சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் ஓடி ஆடி உடல் களைத்து போகும் அளவிற்கு விளையாட வேண்டியது முக்கியம்.பெண் குழந்தைகள் நன்றாக விளையாடும் பொழுது உடலில் கொழுப்புகள் சேர்வது கட்டுப்படும்.
குழந்தையின் கருப்பை ஆரோக்கியம் மேம்படும்.நன்றாக விளையாடும் குழந்தைக்கு பருவ காலத்தை எட்டிய பிறகு மாதவிடாய் சீராக இருக்கும்.சிறு வயதில் நன்றாக விளையாடும் பெண் குழந்தைகளுக்கு திருமணமான பிறகு சுகப் பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
சிறு வயதிலேயே குழந்தையின் கையில் மொபைலை கொடுத்து ஓர் இடத்தில் அவர்களை முடக்கி வைக்க வேண்டாம்.இப்படி உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து மொபைல் பயன்படுத்தும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பூப்பெய்த பிறகு PCOD பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.இதனால் எதிர்காலத்தில் குழந்தையின்மை,கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
மேலும் பெண் குழந்தைகளுக்கு கருப்பு உளுந்து லட்டு,கருப்பு உளுந்து களி,வெந்தயக் களி,எள் உருண்டை,கொய்யா பழம்,சிறுதானிய உணவுகளை மட்டுமே கொடுத்து வளர்க்க வேண்டும்.