Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா! கிழித்து தொங்க விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகரில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக புலி வேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக எலி வேட்டைக்கு சென்று கொண்டு இருக்கிறது. நாம் அம்பை எடுத்துக் கொடுத்து வெற்றி பெற போகின்றோம் திமுக முன்னாள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் நாடகம் நடத்துவார்கள், மக்களை ஏமாற்ற நினைப்பார்கள், நம் மாவட்டத்திற்கு அவர்கள் இருவரும் என்ன செய்தார்கள்.

நம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிக்கும் அனைத்து வகையான கூட்டு குடிநீர் திட்டங்களும் கொண்டு வந்தது அம்மாவின் ஆட்சியில் தான் விருதுநகரில் மருத்துவக் கல்லூரியை நிறுவியது ஸ்டாலின் என்று சொல்கிறார் அவர் புத்தி பேதலித்து பேசுகின்றார். பத்து வருடங்களாக அம்மாவின் ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கின்றது. நான் பத்து வருடங்களாக அமைச்சராக இருக்கின்றேன். மருத்துவ கல்லுலாரியையும், அரசுக்கல்லூரியும் இங்கே கொண்டு வந்தது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், தான் இந்த தொகுதிக்கு எது வேண்டுமென்று கேட்டாலும் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் உடனடியாக செய்து தருவார் அவர் வரும் ஜனவரி மாதத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் யாரோ ஒருவர் பெற்ற பிள்ளைக்கு நான்தான் அப்பா என சொல்வது அசிங்கமாக இருக்கின்றது. அவர் என்னவோ முதலமைச்சர் போல பேசுகின்றார் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தது, அதற்கு சட்டம் இயற்றியது, அனைத்துமே முதல்வரும் துணை முதல்வரும் தான். அதை என்னவோ இவர்தான் பெற்றுத்தந்தது போல பேசுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை கூட வைக்காமல் இருந்துவிட்டு இப்போது நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றார் ஸ்டாலின் பேசுவது எல்லாமே பொய் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க புதிய பிரச்சினை ஒன்று காத்திருக்கின்றது. அவரை பழி வாங்குவதற்காக அவருடைய அண்ணன் அழகிரி கிளம்பியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் சொத்தில் பங்கு தரவில்லை என அழகிரி காவல்துறையிடம் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் நாங்கள் நியாயமாக பேசி அண்ணா அறிவாலய ஒரு பக்கம் வாசற்படியை ஸ்டாலினுக்கும், இன்னொரு பக்க வாசல் படியை அழகிரிக்கும், பிரித்து கொடுப்போம்.

அவர்களுடைய ஒரு லட்சம் கோடி சொத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரித்து தந்து விடுவோம் என்றார் அமைச்சர். அண்ணன் தம்பிகள் இடையே பிரச்சனைகள் இருக்கின்றது. ஆனால் எங்களுக்கு பிரச்சினையே இல்லை ஸ்டாலின் தான் பிரச்சனை என்று நினைத்தோம் ஸ்டாலினை ஒழிப்பதற்காக அழகிரி காத்துக் கொண்டு இருக்கின்றார் என்று தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

Exit mobile version