Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும் :! உயர்நீதிமன்ற உத்தரவு !!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


நெடுஞ்சாலையை அகலப்படுத்தவதற்காக ஒரு மரம் வெட்டினால் அதற்காக 10 மரங்களை நட வேண்டும் என்றும் ,அப்படி 10 மரங்கள் நட்டு மரக்கன்றுகளை  பராமரிக்க வில்லை என்றால் சாலை விரிவாக்கத்திற்காக எந்த மரமும் வெட்ட வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சென்னை-மதுரை நெடுஞ்சாலையில் ஓரத்தில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பான இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் விரைவில் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version