இந்த பறவை மட்டும் உங்களது வீட்டிற்குள் வந்தால் பண மழை கொட்டும்!!
சகுனம் பார்த்து ஒரு விஷயத்தை தொடங்கும் பழக்கம் நம்மிடத்தில் வழக்கமாக உள்ளது.சுப காரியங்களுக்கு செல்லும் பொழுது சகுனம் பார்பது,பறவைகள்,விலங்குகளின் செயலில் சகுனம் பார்ப்பது என்பது பல வழிகளில் சகுனம் பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பறவைகளை வைத்து நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்று அறிந்து கொள்வது அவசியமாகும்.நம் வீட்டிற்கு காகம்,குருவி,வண்ணத்து பூச்சி,சிட்டு குருவி,புறா உள்ளிட்ட பல பறவைகள் வருகிறது.
இதில் முதல் இடத்தில் இருக்கும் பறவை காகம்.அமாவாசை தினங்களில் காகத்திற்கு சாதம் வைக்கும் பழக்கம் மக்களிடத்தில் உள்ளது.இறந்த முன்னோர்கள் காகம் வடிவில் வீட்டிற்கு வருகிறார் என்று அதற்கு படையல் வைக்கப்படுகிறது.காகம் வீட்டருகில் கரைந்தால் நம் வீட்டிற்கு சொந்தபந்தங்கள் வரப் போகிறார்கள் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.இப்படி மனிதர்களுக்கும்,காகத்திற்கு இடையே ஒரு ஆழமான உறவு இருக்கும் நிலையில் காகம் நமது வீட்டிற்குள் வந்தால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் உயர பறக்கும் பறவையான கழுகு நமது வீட்டிற்குள் வருவதை கெட்ட சகுனம் என்று சொல்கிறார்கள்.கழுகு புகுந்த வீட்டில் அன்பு குறைந்து உறவில் விரிசல் உண்டாகும்.அடுத்து நம் வீட்டுற்குள் வரக் கூடாத பறவை வெளவால்.இப்பறவை வீட்டிற்குள் வந்தால் பணப் பிரச்சனை,கடன் தொல்லை ஏற்படும்.
இரவில் மட்டும் கண் தெரியும் பறவை ஆந்தை.இந்த பறவை பார்க்க சற்று பயத்தை கொடுக்கும் தோற்றத்தில் இருக்கும்.இது அதிர்ஷ்ட லட்சுமியின் வாகனமாகும்.ஆனால் இந்த ஆந்தை வீட்டிற்குள் அல்லது வீட்டிற்கு அருகில் வந்தால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.ஆந்தை வீட்டிற்கு வந்தால் வம்ச விருத்தியில் பிரச்சனை ஏற்படுமாம்.
மிக சிறிய வடிவில் இருக்கின்ற சிட்டுக்குருவி ஓர் அழகான பறவை.இது நம் வீட்டிற்குள் வந்தால் அதிர்ஷ்டம் பெருகும்.வீட்டிற்குள் சிட்டுக்குருவி வருவது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.அதேபோல் புறாக்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்று அர்த்தம்.பொன்வண்டு,கிளி போன்ற உயிரினங்கள் வீட்டிற்கு வந்தாலும் நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.