தாளிப்பு வடகம் இப்படி செய்து உணவில் பயன்படுத்தினால் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!!

0
54
If talipu vadagam is made like this and used in food, the taste will be on a different level!!

தாளிப்பு வடகம் இப்படி செய்து உணவில் பயன்படுத்தினால் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!!

குழம்பு,பருப்பு சாம்பார்,கீரை கடையல்,கூட்டு உள்ளிட்டவற்றின் சுவையை கூட்டுவதில் வெங்காய வடகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த வெங்காய வடகம் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்க இந்த முறையில் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 2 1/2 கிலோ

*பூண்டு – 1/4 கிலோ

*உளுத்தம் பருப்பு – 100 கிராம்

*துவரம் பருப்பு – 100 கிராம்

*கடுகு – 2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 50 கிராம்

*கொத்தமல்லி தூள் – 50 கிராம்

*பெருங்காயத் தூள் – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 4 கொத்து

*உப்பு – 100 கிராம்

*நல்லெண்ணெய் – 50 மில்லி

செய்முறை:-

முதலில் 2 1/2 கிலோ வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் 1/4 பூண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.பின்னர் பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு 1 சுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.

இப்போது பெரிய பிளாஸ்டிக் பக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,அரைத்த பூண்டு விழுது,100 கிராம் உளுத்தம் பருப்பு,100 கிராம் துவரம் பருப்பு,50 கிராம் தனி மிளகாய் தூள்,50 கிராம் கொத்தமல்லி தூள்,1 தேக்கரண்டி பெருங்காயத்தூள்,4 கொத்து கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டி கொண்டு எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கி கொள்ளவும்.இலலையெனில்
ஒரு குலுக்கு குலுக்கி வைத்து விடலாம்.

பின்னர் ஒரு வெள்ளைத் துணியை அந்த பக்கெட்டின் மேல் போட்டு நூல் போட்டு கட்டி மூடி வைத்துவிடவும்.தட்டு போட்டு மூடக் கூடாது.

2 நாட்கள் வரை ஊற விட்டு மூன்றாவது நாள் ஒரு தாம்பாளத் தட்டில் பெரிய பிளாஸ்டிக் கவர் போட்டு தயார் செய்து வைத்துள்ள கலவையைகொட்டி வெயிலில் காய வைக்கவும்.

சுமார் 9 நாட்கள் வரை வெயிலில் காய விடுங்கள்.அப்பொழுது தான் வெங்காயத்தில் உள்ள ஈரப்பதம் முற்றிலும் நீங்கும்.பின்னர் கையில் நல்லெண்ணெய் ஊற்றி தேய்த்து கொண்டு காயவைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த உருண்டைகளை மீண்டும் வெயிலில் காய விடவும்.இவ்வாறு செய்யும் பொழுது சுருங்கி சிறிய உருண்டையாக மாறும்.

இந்த உருண்டைகளை உடைத்து பார்த்தால் உள்பக்கத்தில் ஈரம் சிறிதளவு கூட இருக்கக்கூடாது. இவ்வாறு 30 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும்.பின்னர் எடுத்து முறையாக சேமித்து வைத்துக் கொள்ளவும்