Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

#image_title

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம்.

பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா?

பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதினால் பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு திறக்கும் பக்கம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

தப்பி தவறியும் தெற்கு பார்த்தவாறு பீரோவை வைத்து விடாதீர்கள். இதனால் நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவை அனைத்தும் கற்பூரம் காற்றில் கரைவது போல் கரைந்து விடும்.

பீரோ மட்டும் இன்றி அதனுள் வைக்கும் பணத்தையும் திசை பார்த்து தான் வைக்க வேண்டும். பீரோவில் வைக்கும் பணத்தை கிழக்கு அல்லது மேற்கு பார்த்தவாறு வைத்தால் அதன் வரவு அதிகரிக்கும்.

அதுமட்டும் இன்றி பீரோவை சுவரை ஒட்டியவாறு வைக்கக் கூடாது. பீரோவிற்கும் சுவருக்கும் இடையே சற்று இடைவெளி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அடைப்பு இல்லாமல் காற்றோட்டம் இருக்கும். இவ்வாறு இருந்தால் தான் பணம் வந்து சேர்வது தடைபடாமல் இருக்கும்.

Exit mobile version