மத்தியிலும் திமுகவிற்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் தங்களுடைய நிலைமை மோசமாகிவிடும்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக!

0
174

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்திலிருந்து ஒரு கணிசமான அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது. அதற்காக வலிமையான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கடந்த சில மதங்களாகவே நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உண்டான உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக அதிமுக தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இதனை எவ்வளவு முறை எடுத்துக் கூறினாலும் சசிகலா பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ஆகவே அண்மையில் சென்னை வந்த தீய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசவில்லை.

இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரை சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் சார்பாக சிலர் சந்தித்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவிற்கு வராத நெருக்கடியா? இரட்டை இலை முடக்கப்பட்ட சமயத்திலும் எம்ஜிஆர் மனைவியே எதிர்த்து நின்ற போதும், தனி சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றியவர் ஜெயலலிதா. அதேபோல நானும் எதற்கும் தயாராக இருக்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் வழங்கிய பாஜகவின் தரப்பு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஒழுத்தோர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் அவர்களைப் போல நினைத்து தாங்கள் முடிவெடுத்தால் அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரலாம் என்று எச்சரிக்கை செய்ததாக சொல்லப்படுகிறது.

அத்துடன் அவர்கள் மேலும் தெரிவித்து இருப்பதாவது கடந்த சட்டசபை தேர்தலில் 15 சதவீதம் சிறுபான்மை ஓட்டுக்கள் திமுகவிற்கு முழுமையாக கிடைத்ததும் அதிமுக பாஜக கூட்டணி 40 சதவீத ஓட்டுக்களை பெற்றது. இதற்கு ஹிந்து ஓட்டுக்கள் வாங்கியே காரணம் இந்து ஓட்டு வாங்கி இருக்கின்ற கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளில் தான் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரணமா 20க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக அதனுடைய வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆகவே பாஜக இல்லாமல் வெற்றி பெற்று விடலாம் எனவோ சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தை கட்சியின் சேர்க்காமல் வெற்றி பெற்று விடலாம் என்றோ நினைக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் அதிமுக சந்தித்த எல்லா தேர்தலிலும் புள்ளி விவரங்களை சுட்டி காட்டிய பாஜகவின் மேலிடம் திமுகவுக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் எப்போதுமே கிடைத்ததில்லை. ஆகவே அதிமுக ஒரே கட்சியாக போட்டியிடாமல் 3 பிரிவுகளாக இருந்தால் அது திமுகவின் வெற்றிக்கு தான் சாதகமாகும்.

திமுக கூட்டணிக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால் அது ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு உதவிகரமாக இருந்து விடும். மத்தியிலும் திமுகவுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் அதிமுகவின் நிலை மோசமாகிறதோ, இல்லையோ பழனிச்சாமியின் நிலை மிகவும் மோசமாகிவிடும் .தான் விரும்பும் ஒருவரை அதிமுக பொதுச்செயலாளராக்க திமுக தயக்கம் காட்டாது. இப்படி அவர்கள் பழனிச்சாமி தரப்புக்கு பாடம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. காலம் வரும்போது முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாக பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.